சொத்துக்களின் சந்தை மதிப்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
1 min read
Tenkasi District Collector’s action to make the market value of properties available to the public
13.5.2024
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முத்திரை சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள், முக்கிய அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47 ΑΑ στ கீழான தமிழ்நாடு முத்திரை சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல். வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன்படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க தென்காசி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர். சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின். அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம், மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்காசி மாவட்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்
ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.