விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டி
1 min read
In the Vikravandi by-election, the National Democratic Alliance represented the BJP. Competition
14.5.2024
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெறவில்லை. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.