சிவகிரியில் யோகா மூலம் மரம் வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Tree Cultivation Awareness Program through Yoga in Sivagiri
18.5.2024
தென்காசி மாவட்டம்,சிவகிரியில் பிராணா யோகா மையம் சார்பில் உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்து பல்வேறு பிரச்சனைகளை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை சந்தித்து வருகின்றனர், இதை தடுப்பதற்கு சிறந்த வழி மரங்கள் தான் என்பதை அறிந்து கொண்டு,தான் கற்று வரும் யோகா பயிற்சி மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக பிராணா யோகா மையம் மாணவர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்,
தங்கள் ஒய்வு நேரங்களில் மரக்கன்றுகளை அதிகளவில் நடுவதற்கும் மாணவர்கள் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இதற்க்காக மரக்கன்றுகளை அதிகமாக வாங்குவதற்கு பணம் சேமிக்கவும் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 10 ம் வகுப்பு மாணவர் தேவதர்ஷன் அருண் – 9ம் வகுப்பு மாணவர்கள் சரவணண், ஸ்ரீதர், 7 ம் வகுப்பு மாணவர் கள் வெங்கட்பிரபு,
வேதவியாஷ் , அஜய் , 3 ம் வகுப்பு மாணவர் பாரதிராம், ஆகிய மாணவர்கள் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களை ஈர்ப்பதற்க்காக யோகாவில் புது முயற்சியில் இறங்கியுள்ளனர். ,யோகா மாஸ்டர் அருண்குமார் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.