June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியிலிருந்து குற்றாலம், பழையகுற்றாலம் – ஐந்தருவிக்கு சிறப்பு பேருந்துகள்

1 min read

Special buses from Tenkasi to Kurtalam, Old Kutalam – Aindaruvi

29.5.2024
குற்றாலத்தில் சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தென்காசியில் இருந்து குற்றாலம் பழையகுற்றாலம், ஐந்தருவிக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்கி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவு கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், பொதுமேலாளர் (வணிகம்) ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், தென்காசி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கும், குற்றாலத்தில் இருந்து பழையகுற்றாலம், ஐந்தருவிக்கும் சிறப்பு பேருந்துகள் மகளிர் பயணம் செய்ய இலவச பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பழைய குற்றாலம்அருவி பகுதிக்கு செல்ல தனியார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லாத நிலையில் அங்குள்ள கார் பார்க்கிங்கில் இருந்து அருவிப்பகுதிக்கு 2 பேருந்துகள் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்தினை பயணிகள் பயன்படு;த்திக்கொள்ளுமாறு போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.