தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப ஒருமாதம் ஆகலாம்
1 min read
Technical glitch: Sunita Williams may take a month to return to Earth
30.5.2024
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக வீரர் புட்ச் வில்மோடன் ஆகியோர் கடந்த 5-ந்தேதி போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் புறப்பட்டனர்.
அவர்கள் இருவரும் 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அவர்கள் கடந்த 14-ந்தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த 26-ந் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த 26-ந் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால் ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இதனையடுத்து ஜூலை 2-ந்தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என போயிங் தெரிவித்தது. ஆனால் அதை நாசா உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.
இதற்கிடையே நாசாவின்அதிகாரியான ஸ்டீவ் ஸ்டிச் கூறும்போது, ஸ்டார்லைனரின் பயண காலத்தை 45 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டிக்க பரிசீலித்து வருகிறோம். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை அழைத்து வருவதில் அவசரம் காட்டவில்லை என்றார். * * * இங்கிலாந்து பிரதர் ரிஷிசுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் வழிபட்டார்.