July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

புதிய சட்டத்தின்படி சாலையோர வியாபாரியின் மீது முதல் வழக்கு

1 min read

First case against a street vendor under the new law

1.7.2024
மூன்று குற்றவியல் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்திருக்கின்றன. அந்த புதிய குற்றவியல் சட்டங்களில், பாரதிய நியாய சங்கித சட்டத்தின்படி, சாலையோர வியாபாரியின் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிவு எண் 285ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதிய குற்றவியல் சட்டங்களின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.
காவல்துறையின் தகவலின்படி, நேற்றிரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுருந்த பொது, புது டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு பாலத்தின் கீழ் தெரு வியாபாரி ஒருவர் தண்ணீர், பீடி, சிகரெட் (குட்கா பொருட்கள்) விற்பனை செய்து வந்துள்ளார். இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் கடையை சாலையில் இருந்து அகற்றுமாறு ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பலமுறை அந்த வியாபாரியிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது
ஆனால் அவர் கடையை அகற்றாததால், அவர் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நபர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பங்கஜ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புதிய சட்ட விதிகளின்படி வழக்கு பதிவு செய்யப்படும் நிலையில் அந்த வியாபாரிக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் நீட்டிக்கப்படலாம்.
டெல்லி காவல்துறையினரைப் பொருத்தவரை புதிய சட்டங்கள் குறித்தான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் சென்ற வருடமே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த சட்டம் குறித்து காவல்துறையினரிடம் அவகாசம் தேவை என வலியுறுத்தப்பட்டது.
அந்த சமயத்தில் இந்த சட்டத்திற்கான மசோதா நாடாளுமன்ற குழு ஒன்றின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற குழு ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை அளித்திருந்தது. அதன்படிதான், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒப்புதல்கள் கிடைத்த உடன், மாநிலங்களில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோல, மத்திய அரசின் சார்பாகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.