இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள் 25 பேரை விடுவிக்க கோரி மறியல்
1 min read
Protest demanding the release of 25 fishermen arrested by the Sri Lankan Navy
1.7.2024
ராமநாதபுரம் மாவட்டம்
பாம்பனில் இருந்து நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தொழிலுக்குச் சென்றன. பாரம்பரியமான பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பாம்பன் இருதயராஜ், ஜார்ஜன், ஸ்டீபன், படகில் சென்ற 5 மீனவர்கள், ஜார்ஜன் எனபடகில் சென்ற ஜார்ஜன், அமலதாஸ் உள்ளிட்ட 6 மீனவர்கள், ஸ்டீபன் ஆகியோரது படகுகளில் சென்ற 18 மீனவர்கள், தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் 4 நாட்டுப்படகுகளை சிறைபிடித்து காங்கேசன் துறைமுகம் கொண்டு சென்றனர். இதையடுத்து பாம்பன் கடற்கரையில் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின் பாம்பன் சாலை பாலத்திற்கு பேரணியாக வந்த மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. அங்கு வந்த ராமேஸ்வரம் டிஎஸ்பி உமாதேவி மீனவர்களுடன் சமரசம் பேசினார்.