மோடி உரைக்கு எதிர்ப்பு- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
1 min read
Protest against Modi’s speech- Opposition parties walk out
3.7.2024
மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள் இருக்கும்.
இதுவரை எந்த அரசுகளும் செய்யாத அளவிற்கு வேளாண் பொருட்களுக்கான MSP உயர்த்தப்பட்டுள்ளது.
நிலத்தில் இருந்து சந்தை வரை விவசாயிகளுக்கு எனது அரசு துணை நிற்கும், வழிகாட்டும்.
இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்ஜின்களாக 2, 3ம் கட்ட நகரங்கள் இருக்கும்.
நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிற்கு பொது போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்.
சிறிய நகரங்களை மேம்படுத்தி இந்தியாவின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.
காங்கிர அரசு விவசாயிகளை தவறாக வழிநடத்தியது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி தவறான தகவல்களை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு பேச வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் நான் கூறும் உண்மைகளை எதிர்கொள்ள முடியவில்லை. உண்மையை எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதத்திற்கு தயாராக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கின்றனர்.
பாராளுமன்றத்தில் அமளி செய்வதை தவிர வேறு எதுவும் எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாது.
நான் பேசும் உண்மைகளை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.