நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன்- விஜய் பேச்சு
1 min read
Vijay welcomes the decision brought by the Tamil Nadu government seeking exemption from NEET
3.7.2024
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதாவது:
வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா… நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான பணிவான வணக்கங்கள்.
இன்று முக்கியமான விஷயம் குறித்து பேசப்போகிறேன்.
நீட்…
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.
நீட்டை 3 பிரச்சனையாக பார்க்கிறேன்.
- நீட் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
- ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக பார்க்கிறேன்.
- நீட் தேர்வு முறைகேடால் அதன்மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.
நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.
இதற்கு நிரந்தர தீர்வாக, அந்த கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு வேளை சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு திருத்தி, சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.