July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

இதுவரை துப்பாக்கியால் சுடப்பட்ட அமெரிக்கா அதிபர்கள்

1 min read

America’s presidents who have ever been shot

14.7.2024
முன்னாள் அமெரிக்க அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் மீது நேற்றுமுன்தினம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டொனால்டு டிரம்ப் உயிர்தப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொல்லப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.

வில்லியம் மெக்கின்லே

1901 ஆம் ஆண்டில் அப்போதய அமெரிக்க அதிபர் மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தியோடர் ரூஸ்வெல்ட்

1912 ஆம் ஆண்டு முன்னாள் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அவரது நெஞ்சை நோக்கி சுடப்பட்டு, அவரது பையில் 50 பக்கங்கள் கொண்ட பேசுவதற்காக எடுத்துவைத்த குறிப்புக்கள் அடங்கிய காகிதக் கட்டின்மீதும், இரும்பினால் ஆன கண் கண்ணாடி மீதும் பட்டு குண்டு வலுவிழந்ததால் அவர் உயிர்பிழைந்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் அவர் தனது உரையை தொடர்ந்தார்.

பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்

1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழக்க நேரிட்டது.

ஜான் எப்.கென்னடி

1963 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கென்னடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். வியட்நாம் போர் பதற்றம் மற்றும் சமூக உரிமைப் போராட்டங்கள் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவை சூழ்ந்திருந்த சமயத்தில் கென்னடியின் படுகொலை அமெரிக்காவின் மிகவும் வன்முறையான காலகட்டமாக பார்க்கப்படுகிறது

ராபர்ட் எப்.கென்னடி

ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டபின் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்து அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க சமூக உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட அடுத்த இரண்டே மாதத்தில் ராபர்ட் கென்னடியின் கொலை அரங்கேறியது அப்போதய அமெரிக்க அரசியலில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் வாலஸ்

1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வால்ஸ் தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார்.
ஜார்ஜ் போர்ட்

1975 இல் அதிபராக இருந்த போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை பெண்கள் இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் போர்ட் காயங்களின்றி உயிர்தப்பினார்.

ரொனால்டு ரீகன்

1981 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார்.

===

.

.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.