டிரம்புவுக்கு எதிராக பிரசாரம் வேண்டாம்: அதிபர் பைடன் போட்டார் உத்தரவு
1 min read
No campaigning against Trump: President Biden orders
14.7.2024
டிரம்ப் -க்கு எதிராக பிரசாரம் வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், அவரிடம் போனில் பைடன் ஆறுதல் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன், டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருவருக்கொருவர் ஒரே மேடையில் காரசாரமாக விவாதித்து கொண்டனர். இந்நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த அதிபர் பைடன் , டிரம்ப் உடல் நலம் குறித்து போனில் விசாரித்தார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த துயரமான நேரத்தில் டிரம்புக்கு எதிராக யாரும் பிரசாரம் செய்ய வேண்டாம் என்றும் , அவருக்கு எதிரான நடவடிக்கை அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறும் ஆதரவாளரகளை கேட்டு கொண்டுள்ளளார்.