கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்; உருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
1 min read
Birthday of Karmaveer Kamaraj; Courtesy of M.K. Stalin for portrait
15.7.2024
மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, ‘கல்வி வளர்ச்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் கல்வி கற்கவும், தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாக்கியது நிச்சயம் காமராஜர் ஆட்சியில்தான் என்று தலைவர்களால் புகழப்பட்டவர்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு முழுவதும் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மற்றும் அவரது திரு உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது. குறிப்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.