“மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்”- முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி
1 min read
“I am satisfied that the hunger of human resources is gone” – Chief Minister M.K. Stalin’s delight
15.7.2024
மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன் என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திய நிகழ்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கல்வி வளர்ச்சி நாளான இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு உண்டார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.