கல்வி துறையில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது- பிரதமர் மோடி புகழாரம்
1 min read
Kamaraj’s contribution to the field of education is unmatched- PM Modi praises him
15.7.2024
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்து. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினார். பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காமராஜரின் பிறந்தநாளான இன்று அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். கல்வி போன்ற துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது இலட்சியங்களை நிறைவேற்றவும், நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.