வெள்ளைபனையேறிப்பட்டி, சிவசைலனூர் பள்ளியில் காலை உணவு திட்டம்
1 min read
Breakfast Program at Sivasailanur School, Villipanaiyeripatti
15.7.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளை பனையேறிப்பட்டி, சிவசைலனூர் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளைபனையேறிப்பட்டி இந்து உயர்நிலைப்பள்ளி மற்றும் சிவசைலனூர்றி.டி.றி.ஏ. தொடக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன், ஒன்றிய கவுன்சிலர் வளன்ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஊராட்சி தலைவர் தினேஷ்குமார், கிளை செயலாளர் கணேசன், மதி, பொன்பாண்டி, சரவணன், கருவேல்ராஜ், சக்திவேல், ஊராட்சி துணைத்தலைவசர் சக்தி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.