July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்தளம்பாறையில் காலை உணவு திட்டம்-எம்எல்ஏ, ஆட்சியர் தொடங்கி வைத்தனர்

1 min read

MLA, Collector inaugurated the breakfast program in Mattalamparai

16.7.2024
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சி விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் ஊரகப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கவிழா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சி விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் ஊரகப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கவிழா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 354 அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் 17349 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது 15.07.2024 முதல் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். தற்போது இத்திட்டத்தின்கீழ் தென்காசி மாவட்டத்தில் 354 அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23028 மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வகையான காலை உணவு வழங்கப்படும். திங்கள்கிழமை அன்று ரவா உப்புமா, காய்கறி சாம்பார். செவ்வாய்கிழமை அன்று கோதுமைஉப்புமா, காய்கறிசாம்பார், புதன்கிழமை அன்று வெண்பொங்கல், காய்கறிசாம்பார். வியாழக்கிழமை அன்று அரிசிஉப்புமா, காய்கறிசாம்பார். வெள்ளிக்கிழமை அன்று சேமியாகிச்சடி, காய்கறிசாம்பார். ஆகிய வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.

அனைத்து மாணவ மாணவியருக்கும் சர்க்கரை பொங்கல், ரவா உப்புமா, காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது. காலை உணவு சுவையாகவும் தரமாகவும் இருந்ததாக உணவு அருந்திய அனைத்து மாணவ மாணவியரும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மதி இந்திரா ப்ரியதர்ஷினி, முதன்மை கல்வி அலுவலர் மு.முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் கே.கண்ணண். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே ஜெயபாலன், தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வல்லம் மு.சேக் அப்துல்லா, துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், மத்தளம்பாறை ஊராட்சிமன்றத் தலைவர் மைதிலி மகேஷ், துணைத்தலைவர் வேலம்மாள். ஊராட்சி செயலாளர் ந.ஆறுமுகம், விவேகானந்தா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா, மத்தளம்பாறை ஜெ.ஜேம்ஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள். வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் ஊராட்சி உறுப்பினர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.