அமெரிக்காவிற்கான இந்திய தூதராகிறார் வினய் குவாத்ரா
1 min read
Vinay Kwatra to be India’s ambassador to the US
17.7.2024
அமெரிக்காவிற்கான இந்திய தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ராவை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவிற்கான இந்திய தூதராக இருந்த தரண்ஜித் சந்து, ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், காலியாக இருந்து வருகிறது.அந்த பதவிக்கு, வினய் குவாத்ராவை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தூதரக பணியில் நீண்ட அனுபவம் பெற்றுள்ள வினய் குவாத்ரா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தூதரக அதிகாரியாக பணியாற்றி உள்ளார். கடைசியாக வெளியுறவுத்துறை செயலாளராகவும் இருந்தார்.நவ., மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு புதிய அரசு பதவி ஏற்றதும், அந்நாட்டு நிர்வாகத்துடன் நெருங்கிய உறவை பேணி, இந்தியா அமெரிக்கா உறவில் ஸ்திரத்தன்மையை வினய் குவாத்ரா முயற்சிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.