ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
2 terrorists shot dead in Jammu and Kashmir
18.7.2024
சமீப காலமாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. பயங்கரவாதிகளின் இந்த ஊடுருவலை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தூப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் பணியானது நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.