தென்காசியில் போலீசார் பறிமுதல் செய்த 65 வாகனங்கள் 5-ந் தேதி ஏலம்
1 min read
65 vehicles confiscated by the police in Tenkasi will be auctioned on the 5th
18.7.2024
தென்காசி மாவட்ட காவல்துறையினர் மூலம் மதுவிலக்கு, மற்றும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 வாகனங்களின் பொது ஏலம் 05.08.2014 அன்று நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
டி .பி.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதி முறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர மோட்டார் வாகனம், ஒரு மூன்று சக்கர மோட்டார் வாகனம், 63 இரு சக்கர மோட்டார் வாகனங்கள் என மொத்தம் 65 மோட்டார் வாகனங்கள் 05.08.2024 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேற்படி வளாகத்தில் 01.08.2024 ஆம் தேதி முதல் 03.08.2024 தேதி வரையிலான நாள்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை வாகனங்களை நேரில் பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய அடையாள அட்டை (ஆதார். ஓட்டுநர் உரிமம்) நகலுடன் ரூபாய் 5,000/- முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அன்றைய தினமே ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி தொகையினையும் உடனடியாக அரசுக்கு செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும் இத்தகவலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.