July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் அதிமுக கொடியுடன் சசிகலா பிரச்சாரம்

1 min read

Sasikala campaigning with AIADMK flag in Tenkasi district

18.7.2024
அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில் தமிழ சும் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை வி.கே.சசிகலா நேற்று தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார். அவருக்கு தென்காசியில் ஏராளமான பெண்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தென்காசி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த சசிகலா இரவு குற்றாலம் தனியார விடுதியில் தங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலையில் தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். அப்போது காசிமேஜர்புரத்தில் பிரச்சார வேனில் அமர்ந்தபடி மக்கள் மத்தியில் பேசியதாவது:

எம்ஜிஆரால் உருவாக்கப் பட்ட அதிமுக மக்களுக்கான இயக்கம். ஏழை, எளியவர்கள் நலன்பெறும் வகையில் சத்து ணவு திட்டம், விஏஒ பதவி, தொழிற்கல்வி மையங்கள் போன்ற திட்டங்களை தந்தவர் அவர். தொடர்ந்து ஜெயலலிதா வும் எம்ஜிஆர் வழியில் ஆட்சியை தந்தார். தொட்டில் குழந்தைத் திட்டம், அம்மா உண வகம், தாலிக்கு தங்கம் என தனது வாழ்நாள் முழுவதும் எம்ஜிஆர் நினைத்த அனைத்து திட்டங்க ளையும் நிறைவேற்றி கொடுத் தார். இவ்வாறு மக்களுக்கான ஆட்சியை நடத்தியவர்கள் எம் ஜெயலலிதாவும். எம்ஜிஆரும், ஆனால், திமுக ஆட்சியில் எந் தவொரு புதிய திட்டங்களோ தேர்தலின் போது அளித்த வாக் குறுதிகளோ நிறைவேற்றப்பட வில்லை. தற்போது மின்கட்ட ணத்தை உயர்த்தி மக்களின் தலை யில் சுமையை ஏற்றியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் ரூ. 3 லட்சம் கோடி கடன் வாங்கி யுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்தால் போதுமா? திமுககாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே? அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை. ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவ தில்லை. நீட் தேர்வு ரத்து என் பது உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆட்சியை திமுகவால் ஒருபோதும் தரமுடி யாது. நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து 2026இல் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்கு வோம்.
மேலும், தென்காசி மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்னைகளைப் பட்டியலிட்ட அவர், அரசு அவற்றை நிறைவேற்ற முனைப்புக் காட்ட வேண்டும் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் சசிகலாலிற்கு கிரேன் மூலம் மாலை அணிவிக்கப்பட்டது. அங்கிருந்து கீழப்புலியூர், சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பலம், பாவூர்சத்திரம், துவரங்காடு, குறுங்காவனம், சுரண்டை, வி கே புதூர், வீராணம், ஊத்துமலை, உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார். இதில் திருச்சிற்றம்பலம் துவரங்காடு குறுங்காவனம் ஆகிய கிராமங்களில் அதிமுக கொடியினை வி கே சசிகலா ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பூசைத்துரை பாண்டியன், வழக்கறிஞர்கள் கே.சரவண சேதுராமன், கே.சண்முகசுந்தரம், வெள்ளக்கால் ஜெகன், திருச்சிற்றம்பலம் தங்கபாண்டியன், கீழப்புலியூர் ரமேஷ் பாண்டியன், சுரண்டை செந்தூர் பாண்டியன், சொக்கம்பட்டி ராஜா, வழக்கறிஞர்கள் ராஜா, கணேசன், திருமலைக்குமார், ரமேஷ் பாண்டியன், இலத்தூர் செல்லச்சாமி, காசிமேஜர்புரம் ராணி, சுந்தரபாண்டிபுரம் வேலம்மாள், பாட்டாக்குறிச்சி வள்ளி, செல்லதுரை, கிருஷ்ணவேணி, வீராணம் சிங்கம், வாசுதேவநல்லூர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தர்மராஜ் என்ற கண்ணன், மானூர் யூனியன் கவுன்சிலர் முத்துப்பாண்டியன் உட்பட பலர் செய்து வருகிறார்கள் இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.