அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி
1 min read
US President Joe Biden is confirmed to be infected with Corona
18.7.2024
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து லாஸ் வேகாஸ் பயணத்தை ரத்து செய்த ஜோ பைடன், தான் நன்றாக இருப்பதை கூறும் வகையில் செய்தியாளர்களிடம் வெற்றி செய்கையை காண்பித்து சென்றார்.
சில நாட்களாக சளி தொந்தரவு, இருமலால் ஜோ பைடன் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
முன்னதாக அதிபர் பைடன் அளித்த பேட்டியில், தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து இருந்தார்.