410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம்- சென்னை ஐகோர்ட் உத்தரவு
1 min read
Appointment of 410 teachers on merit basis- Madras High Court order
19.7.2024
10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.