தன் உயிருக்கு ஆபத்து என்கிறார் ஜான் பாண்டியன்
1 min read
John Pandian says his life is in danger
19.7.2024
தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜான் பாண்டியன் இன்று திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் (கொலை செய்தவர்கள்) தலைவர்களை கொலை செய்து விட்டு பெயர் வாங்கி விடலாம் என்பதை தவிர எதிரிகள் என்ற எண்ணத்தில் இல்லை. இந்த நிலைமைதான் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.
இவரை செய்து விட்டோம் என பெயர் வாங்க வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் சிலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கண்காணித்து தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு மிரட்டல் இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளேன். தற்போதும் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். உளவுத்துறை பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னிடம் தெரிவிக்கவில்லை. அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
திரும்ப பெறப்பட்ட போலீஸ் பாதுகாப்பை எனக்கு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் என் உயிருக்கு தற்போதும் ஆபத்து உள்ளது. சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
வேலைவாய்ப்பு இல்லாததும், கஞ்சாவும்தான் கூலிப்படைக்கு காரணம். தமிழகத்தில் நடைபெறும் கொலைகளுக்கு அதிகாரிகளும் உடந்தை.
இவ்வாறு ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.