ஆவுடையானூரில் காமராஜர் பிறந்த நாள் விழா
1 min read
Kamaraj’s birthday celebration at Audaiyanur
19.7.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
ஆவுடையானூர் சுற்றுவட்டார நாடார் மாட்டு வியாபாரிகள் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு
ஆவுடையானூர் சுற்றுவட்டார நாடார் மாட்டு வியாபாரிகள் சங்க தலைவர் காயாம்புசாமி தலைமை தாங்கினார். செயலாளர் தங்கம் பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வந்திருந்த அனைவரையும் சேகர் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் கலந்து கொண்டு காமராஜரின் புகழ் பற்றியும் சங்கத்தின் நோக்கம் பற்றியும் விரிவாக உரையாற்றினார். அடுத்த ஆண்டுக்குள் இந்த சங்க இடத்தில் கட்டிடம் எழப்பபட்டு பெருந்தலைவரின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவ உறுப்பினர்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பல.சந்திரன் நா.சந்திரன் சுடலைகனி கண்ணன் இராமர் உதயகுமார் இராமர் செல்லப்பாண்டி பொன்ராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.முடிவில் வேல்ச்சாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.