குஜராத்தில் இருந்து இலங்கை புறப்பட்ட சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து
1 min read
A terrible fire broke out on a cargo ship departing from Gujarat to Sri Lanka
20.7.2024
குஜாத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் உள்ள அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சரக்கு கப்பல் புறப்பட்டது.
கோவாவிற்கு தென்மேற்கே 102 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து மும்பை பிரிவு கடலோர காவல்படையினர் விரைந்து சென்று சரக்கு கப்பலில் பற்றி எரிந்த தீயை பலமணிநேரம் போராடி அணைத்தனர். மேலும், சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த பணியில் கடலோர காவல்படைக்கு சொந்தமான டிரோனியர் ரக விமானமும் பயன்படுத்தப்பட்டது. சரக்கு கப்பலில் பற்றி எரிந்த தீ அணைக்கபப்ட்ட நிலையில் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.