July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா- போக்குவரத்து மாற்றம்

1 min read

Aadithapasu festival at Sankaranko – Traffic change

20.7.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் நகரப் பகுதிகளில் பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி சங்கரன்கோவில் பகுதியில் ஆடித்தபசு 21.07.24 அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன்படி வாகனங்கள் செல்லும் வழிகள்

திருநெல்வேலி ரோடு வழியாக சங்கரன்கோவில் இராஜபாளையம், மதுரை, செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநெல்வேலி ரோடு சண்முகநல்லூர் விளக்கு வழியாக சின்னகோவிலான்குளம், நடுவகுறிச்சி, சங்கரன்கோவில் இராயிலவே பீடர் ரோடு, TB ஜங்சன் வழியாக இராஜபாளையம் செல்ல வேண்டும்.

இராஜபாளையம் ரோடு வழியாக திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் இராஜபாளையம் சாலை ஸ்டேட் பேங்க் சாலை வழியாக கீதாலயா தியேட்டா ரோடு, கருவாட்டுக்கடை முக்கு திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக எம்பி வீடு கழகுமலை ரோடு இராமநாதபுரம் விளக்கு வலது புறம் திரும்பி இராமநாதபுரம், நெடுங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.

புளியங்குடி, சுரண்டை, தென்காசியில் இருந்து திருவேங்கடம் கோவில்பட்டி செல்லும் வாகனங்கள் அனைத்தும் இராஜபாளையம் ரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ளே சென்று கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுக்கடைமுக்கு வழியாக திருவேங்கடம் கோவில்பட்டி செல்ல வேண்டும்.

கழகுமலை, திருவேங்கடம் சாலையில் இருந்து இராஜபாளையம், தென்காசி, புளியங்குடி, சுரண்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம் சாலை செல்வா சில்க்ஸ் சாலையில் வலது புறம் திரும்பி வையாபுரி மருத்துவமனை ஜங்சன், ஐந்து வீட்டுமனை வழியாக இராஜபாளையம் சாலையில் வந்து செல்ல வேண்டும்

மேலும் திருநெல்வேலி ரோடு கோமதியம்மாள் பெண்கள் பேலநிலைப்பள்ளி, இராஜபாளையம் ரோடு கல்மண்டபம், சுரண்டை ஜங்சன்,
புதிய பேருந்து நிலையம் சங்கரன்கோவில், மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் வந்து திரும்பி செல்லும் சிறப்பு பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையம் வரை அனுமதிக்கப்படும்

மேலும் கனரக வாகனங்கள் லாரிகள், டிப்பர், டாரஸ், ட்ரைலர் போன்ற வாகனங்கள் ஆடிதபசு அன்று காலை 07.00 முதல் இரவு 12.00 மணிவரை சங்கரன்கோவில் சாலையில் வர அனுமதி இல்லை.

மேலும் இராஜபாளையம் வழியாக வரும் கனரக வகனங்கள் பருவக்குடி வழியாக திருவேங்கடம் கோவில்பட்டி செல்ல வேண்டும்.
புளியங்குடி சாலையில் புளியங்குடி சிந்தாமணியில் இருந்து இராஜபாளையம் செல்ல வேண்டும்.

திருநெல்வேலி சாலையில் வரும் கனரக வாகனங்கள் பனவடலிசத்திரத்தில் இருந்து அய்யாபுரம், கழுகுமலை வழியாக செல்ல வேண்டும்.கரண்டை வழியாக வரும் கனரக வாகனங்கள் வீரசிகமணியில் இருந்து புளியங்குடி, சிந்தாமணியில் வழியாக இராஜபாளையம் செல்ல வேண்டும். இவ்வாறு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.