தென்காசியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா
1 min read
Laptop distribution ceremony for teachers in Tenkasi
20.7.2024
தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் வழங்கினார்கள்.
தென்காசி மாவட்டம் பள்ளி கல்வித்துறை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ. ராஜா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் ஆகியோர் முன்னிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சகி ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்ஸகே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கனகம்மாள். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, உதவி பொறியாளர் (கடட்டம் மற்றும் பராமரிப்பு) சுரேஷ்குமார், உதவி பொறியாளர் (மின்சாரம்) சிவசங்கர், சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் திரு. கனகராஜ் , தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்சாதிர், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) திருகண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் .ஜெயப்பிரகாஷ், உதவி இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) மோகன்ராஜ் ஆய்வாளர் திரு.பாலமுருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் வசந்தி வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.