செங்கோட்டை – சென்னைக்கு அந்தியோதயா ரெயில் இயக்க கோரிக்கை
1 min read
Sengotta – Chennai to Antiyothaya train operation request
20.7.2024
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு அந்தியோதயா ரயில் இயக்க வேண்டும் என்று
தென்காசி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர்
என்.வெங்கடேஸ்வரன் தென்னக இரயில்வே மேலாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
தென்காசி ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். வெங்கடேஸ்வரன் தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமானதாக கருதப்படும் தென்காசி இப்போது மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. எனவே தென்காசியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து தென்காசிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ரயில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் செங்கோட்டையில் இருந்து சேலம், காட்பாடி வழியாக திருப்பதிக்கு ரெயில் விட வேண்டும்.
மேலும் தென்காசியில் இருந்து பெங்களூரு, மற்றும் கோவைக்கு ரெயில் விட வேண்டும். பகலில் சென்னைக்கு ரெயில் விட வேண் டும். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கும், எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கும் ரெயில் விட்டால் ஏராளமான பயணிகள் பயனடைவார்கள்.
செங்கோட்டையில் இருந்து வாரம் மூன்று முறை சென்னைக்கு செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். மேலும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு அந்தியோதயா ரெயில் இயக்க வேண்டும். மதுரை வழியாக மயிலாடுதுறைக்கு செல்லும் ரெயிலில் ஏராளமான பயணிகள் செல்கிறார்கள். அதில் போதுமான பெட்டிகள் இல்லை.எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை மனுவினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி, மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ , தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.