ஜெயக்குமாரின் சாவு குறித்த விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.- கார்த்தி சிதம்பரம் ஆதங்கம்
1 min read
The investigation into Jayakumar’s death is in slow motion.- Karthi Chidambaram Aadhangam
20.7.2024
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.
ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொடுங்கொலை செய்யப்பட்டார். இந்தியாவை ஆண்ட கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு இன்று வரை இந்த அரசு ஒருவரை கூட கைது செய்யவில்லை. காவல்துறை என்கவுண்டர் செய்வது சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல.. அந்த வழக்கை முடிப்பதற்காக தான் என்கவுண்டர் செய்கிறார்கள். இப்போது கூலிப்படை கொலைகள் நடைபெறுகிறது அதை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். அதுபோல மின்கட்டண உயர்வு பற்றியும் நாம் பேசியாக வேண்டும். திருமாவளவனுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிட்டுகளுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.