குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
1 min read
Tourists thronged to bathe in Kurdala Falls
20.7.2024
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருவதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு குடும்பம் குடும்பமாக படை எடுக்க தொடங்கியுள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள உணவு மற்றும் பழக்கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பதோடு பலாப்பழங்களை வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.
இன்று வானம் மேகமூட்டத்துடனும், விட்டு விட்டு சாரல் மழை மற்றும் குளிர்ந்த காற்றுடன் குளு,குளு சீசன் நிலவி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது