செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு- மருத்துவமனையில் அனுமதி
1 min read
Senthil Balaji suddenly ill-admitted to hospital
21.7.2024
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று மதியம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜி ராயப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.