தென்காசியில் கதர் கிராம தொழில் வாரிய உற்பத்தி பொருட்கள் விற்பனை
1 min read
Tamil Nadu Kadar Village Industries Board Manufactured Products Sale in Tenkasi
23.7.2024
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உற்பத்தி பொருட்களான கதர் ரகங்கள், கிராமப் பொருட்கள் மற்றும் பனைவாரிய பொருட்களின் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், துவக்கி வைத்தார்.
அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் (இருப்பு இலஞ்சி) கதர் அங்காடி இயங்கி வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் உத்தமர் காந்தியின் கொள்கையினை கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முழுவதுமாக
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உற்பத்தி பொருட்களாக கதர் ரகங்கள், கிராமப் பொருட்கள் மற்றும் பனைவாரிய பொருட்களின் விற்பனையினை அதிகரித்திடும் வகையில் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22.07.2024 (திங்கள்கிழமை) மணியளவில் நடைபெற்றது.
தொடர்ந்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உற்பத்தி பொருட்களான கதர் ரகங்கள், கிராமப் பொருட்கள் மற்றும் பனைவாரிய பொருட்களின் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், துவக்கி வைத்தார்.
கதர் ரகங்கள், கதர் பாலியஸ்டர் ரகங்கள், கதர் ரெடிமேட் ரகங்கள், கதர் போர்வை மற்றும் மெத்தை விரிப்புகள்,கதர் துண்டு மற்றும் தலையணை உறகைள்,கதர் பட்டு ரகங்கள், கதர் உல்லன் மற்றும் கம்பளி ரகங்கள் மற்றும் தேன் பாட்டில்,கம்யூட்டர் சாம்பிராணி,கப் சாம்பிராணி, ஊதுபத்தி (மல்லிகை, ரோஸ், சாண்டல், லாவண்டர், கஸ்தூரி), குமரி காம்போ சோப்புகள்,பிராக்ரன்ஸ் காம்போ சோப்புகள், நறுமண குளியல் சோப்புகள் (லாவண்டர், ரோஸ்)(ரெட் சாண்டல், சாண்டல்),குறிஞ்சி சாண்டல் சோப்பு, டிடர்ஜெண்ட் சலவை சோப்பு, டிடர்ஜெண்ட் Tiqaid (திரவ சோப்பு), சாரல் ஷாம்பூ, ஒண்டர் வாஷ் சலவை பவுடர், ஜவ்வாது, ஜவ்வாது எஸ்பிரே, கிப்ட் பேக் (ஊதுபத்தி, தீப்பெட்டி, ஜவ்வாது, பூஜா பவுடர், திரி, சூடம், நெய் விளக்கு),சூடம், சுகப்பிரியா வலி நிவாரணி தைலம் (Roll on), கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கேழ்வரகு, தினை, மூங்கில் அரிசி, கருப்பட்டி, பனங்கற்கண்டு -சரல், பனங்கற்கண்டு சலங்கை, சுக்கு காபி தூள் பவுடர், பனங்கற்கண்டு சுக்கு காபி தூள், பனங்கிழங்கு மாவு, சுக்கு காபி பொடி (மிளகு, திப்பிலி, பனங்கற்கண்டு), கருப்பு கட்டி காபி தூள், பாம் ஜீஸ், சுக்கு மிளகு திப்பிலி கற்கண்டு பால்மிக்ஸ், சுக்கு மிளகு திப்பிலி, கருப்பட்டி கற்கண்டு பால்மிக்ஸ் போன்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை
செய்யப்பட்டன.