பூமியை விட்டு விலகி செல்லும் நிலவு
1 min read
Moon moving away from Earth
3.8.2024
அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிலவை பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதில் நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பூமியில் இருந்து நிலவு ஆண்டுக்கு சுமார் 3.8 சென்டிமீட்டர் வீதம் விலகி செல்கிறது என்றும், இது பூமியில் நாட்களின் நீளத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலவு விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம் என்றார்.