தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக தென்மேற்கு பருவமழை
1 min read
More than normal southwest monsoon in Tamil Nadu
11.8.2024
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.
இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா. கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (ஆகஸ்ட் 11) வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் 263.7 மி.மீ மழை பெய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பெய்யும் சராசரி மழை அளவு 145.4 மி.மீ ஆகும். ஆகவே தற்போது வரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.