குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
1 min read
Tourists thronged the courtalam
11.8.2024
குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. கனமழை பெய்யும் நேரங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்படும்.
இந்த நிலையில், மழை குறைந்து நீர்வரத்து சீராக இருப்பதையடுத்து குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது.