அம்பை: மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய் தற்கொலைக்கு முயற்சி
1 min read
A mother who killed her daughter by throwing her into a well attempted suicide
12/8/2024
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரும் ஜோதி (வயது 34) என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரே வீட்டில் ‘லிவிங் டுகெதர்’ முறையில் தம்பதியாக வாழ்ந்து வந்தனர். இவர்களது மகள் ஆனி ரோஸ் (வயது 11). இவர் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அரசு ஊழியருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜோதி கேட்டதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை.இதில் மனம் உடைந்த ஜோதி, மகள் ஆனிரோஸிடம்,
தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அவர் இனி நம்மிடம் அன்பாக இருக்க மாட்டார். இதனால் நாம் இருவரும் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று கூறி நேற்று முன் தினம் மதியம் வெளியே அழைத்துள்ளார்.
இதை யடுத்து 2 பேரும் கல்லிடைக்குறிச்சி பொன் மாநகரில் உள்ள கிணறு அருகே சென்றுள்ளனர். அங்கு கிணற்றில் குதிக்க மகள் தயங்கி நின்ற நிலையில் அவரை ஆனி ரோஸ் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். அதன் பின்னர் அவரும் கிணற்றுக்குள் குதித்தார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது கிணற்றில் ஜோதி தத்தளித்துக் கொண்டிருந்தார். உடனே அம்பை தீய ணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோதியை உயிரு டன் மீட்டனர். ஆனால் ஆனிரோஸ் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டார் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கலா, எஸ்ஐ ஆழ்வார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கிணற்றில் மூழ்கி இறந்த ஆனிரோஸின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக, தென்காசி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் ஜோதி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து eவிசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.