திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடி நன்கொடை
1 min read
Donation of Rs.21 Crores to Tirupati Devasthanam Trust
12.8.2024
ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளை அளித்து வருகிறது. உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை வழங்குவதை இந்த அறக்கட்டளை நோக்கமாக கொண்டுள்ளது.இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ரஜீந்தர் குப்தா திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரது குடும்பத்தினருடன் இந்த நன்கொடை காசோலையை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினார்.