யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக உயர்ந்து வருகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
1 min read
Elephant population continues to rise steadily: Record of Chief Minister M.K.Staln
12/8/2024
சர்வதேச யானைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“சூழலியற் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. தமிழிலக்கியம் முழுதும் பல்வேறு பெயர்களால் யானைகள் குறிப்பிடப்படுவதில் இருந்தே அவை இம்மண்ணுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை உணரலாம்.
பல்லுயிர் காக்கும் நமது அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக உயர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை சர்வதேச யானைகள் தினத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.