கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
1 min read
DMK allies announce boycott of Governor’s tea party
13.8.2024
நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க உள்ளார் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., அ.தி.மு.க. , காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், சுதந்திரதின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி , கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.