ரஷியாவின் மூன்று மாகாணங்களிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
1 min read
Indian Embassy instructs to leave three provinces of Russia
15/8/2024
உக்ரைன் எல்லையில் உள்ள ரஷியாவின் பிரையன்ஸ்க், பெல்கோரோடு, குர்ஸ்க் ஆகிய மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய பாதுகாப்பு சம்பவங்களை கருத்தில்கொண்டு பிரையன்ஸ்க், பெல்கோரோடு, குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்த பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதவி தேவைப்படும் இந்திய மக்கள் அல்லது மாணவர்கள் இந்தியத் தூதரகத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், +7 965 277 3414 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.