சேர்ந்தமரத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
1 min read
Medical college student commits suicide in Pradaharam
15.8.2024
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரத்தில் மருத்துவ கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 47). இவருக்கு மின்னல் கொடி(வயது 43) என்ற மனைவியும்,பிரபு (வயது 21) என்ற மகனும்,ஜெகதா (வயது 18) என்ற மகளும் உள்ளனர்.பிரபு திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கல்லூரி விடுமுறையில் தன சொந்த ஊரான சேர்ந்தமரத்துக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் 8 ம் தேதி வியாழக்கிழமை இரவு
காமராஜ் தனது மகள் ஜெகதாவை (18),புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சேர்க்க தனது மனைவியுடன் சென்று உளளார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பகலில் வீட்டில் தனியாக இருந்த பிரபு தூக்கில் தொங்கியுள்ளார்.
வெகு நேரமாகியும் பிரபு வெளியில் வராததால் பக்கத்து வீட்டார் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரபு தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேர்ந்தமரம் போலீசார் பிரபு உடலை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.போலீசார் வீட்டில் சோதனை செய்த போது அவரது செல்போன் சுக்கு நூறாக உடைந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.