குஷ்பு பதவி விலகியது ஏன்?
1 min read
Why did Khushbu resign?
15.8.2024
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குஷ்புவிடம் இருந்து பெறப்பட்ட ராஜினாமா கடிதத்தினை ஏற்றுக் கொண்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“எந்தவொரு அழுத்தம் காரணமாகவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. கட்சி பணிகளில் சுதந்திரமாக ஈடுபடவே மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளேன். மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டேன். தற்போது தான் அதிகாரப்பூர்வகாக அறிவித்துள்ளார்கள். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தொலைநோக்கு பார்வை கொண்டது.”
இவ்வாறு அவர் பேசினார்.