தெற்கு பாப்பாங்குளத்தில் குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா?
1 min read
Nellai: Will the tiger roam in the residential area? – Explanation of authorities
16.8.2024
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெற்கு பாப்பான் குளம் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. இது அப்பகுதியில் பரபரப்பையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குனரின் உத்தரவின் படி, புலி நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் சமூக வலைதளங்களில் பரவிய புலியின் புகைப்படம் மேற்கு வங்காளத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், மணிமுத்தாறு மற்றும் தெற்கு பாப்பான் குளம் பகுதிகளில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை எனவும் இதனால், பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவை இல்லை எனவும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.