தென்காசியில் மருத்துவமனைகள் அடைப்பு
1 min read
Blockade of hospitals in South Kashmir
17.8.2024
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும் எனபதை வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் மருத்துவமனைகள் மூடப்பட்டது மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் அப்துல் அஜீஸ், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் மற்றும் குற்றாலம் மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் டாக்டர் பார்வதி சங்கர், டாக்டர் பிராம்ப்டன் பெல், டாக்டர் ராஜசேகரன் டாக்டர் மூர்த்தி, டாக்டர் செல்வ பாலா, ஆகியோர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.
இதுபற்றி இந்திய மருத்துவர் சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் அப்துல் அஜீஸ் கூறியதாவது:-
இந்தியாவின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயமும் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவியான பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிரிச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த துயரமான சம்பவம் மருத்துவ சமுதாயம் மட்டும் அல்லாமல் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நம்புகின்ற ஒவ்வொரு தனி நபரையும் வேதைனைக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, அந்த மருத்துவக் கல்லூரியை 1000க்கும் மேற்பட்ட கூட்டத்தாரால் சேதப்படுத்தப்பட்டது இந்த சம்பவம் மருத்துவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது மட்டுமல்லாது கொலை வழக்கின் முக்கிய ஆதாரங்களையும் அழித்துள்ளன. இந்த செயல்கள் நீதி மற்றும் ஜனநாயகத்தின் முக்கிய கொள்கைகளுக்கு எதிரானவையாகும்.
இந்த சம்பவத்தை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளையின் சார்பில் இன்று ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 6 மணி வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் மூடப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
அனைத்து அவசரமில்லா சேவைகளையும் நிறுத்தி வைக்கிறது. அவசரச் சேவைகள் தொடர்ந்து இருக்கும். வெளிப்புற நோயாளி சேவைகள், வார்டு கடமைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள், கல்வி நடவடிக்கைகள் எதுவும் நடத்தப்படாது. இந்த நிறுத்தல் எல்லா துறைகளிலும் உள்ள எங்களது மருத்துவர்கள் சேவையளிக்கும் இடங்களில் நடைமுறைப் படுத்தபடும்.
இந்த போராட்டம் எங்கள் கோபத்தை வெளிப்படுத்தல் மற்றும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அவசியமான படியேற்றம் ஆகும்:இந்த சம்பவத்தில் நடுநிலையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரியை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும். 3. மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை களை பாதுகாப்பு வலயமாக அறிவிக்க வேண்டும்.
மருத்துவமனைகளின் எல்லா இடங்களிலும் சி.சி.டி.வி கேமேராக்களை அமைக்க வேண்டும்.மருத்துவக் கல்லூரி களில் போதிய பாதுகாப்பு நபர்களை நியமிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.பெண் மருத்துவர்கள் இரவு நேரங்களில் பணி செய்தால் கண்டிப்பாக பாதுகாப்பு வழங்கிப் பட வேண்டும்.