‘டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை பெற குழு அமைக்கப்படும்’ – மத்திய அரசு
1 min read
‘Committee to be constituted to receive recommendations regarding safety of doctors’ – Central Govt
17.8.2024
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்க ளுக்கு அவர்களின் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை பெறவும் பரிந்துரை குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. அந்த குழுவிடம் பரிந்துரைகளை வழங்க மாநில அரசுகள் உள்பட அனைத்து பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது