தென்காசியில் காவல்துறை துணை தலைவர் மூர்த்தி ஐபிஎஸ் ஆலோசனை
1 min read
Deputy Superintendent of Police Murthy IPS advice in Tenkasi
17.8.2024
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறை துணைத் தலைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தொன்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். வி.ஆர்.ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட காவல்கதுறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுத்து சிறப்பாக செயல்பட்ட ஆலங்குளம் காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சிறப்பு சார்புஆய்வாளர் ரமேஷ், தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி,தலைமை காவலர் சண்முகவேல் ஆகியோருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.