இலவச மின் இணைப்பு – மின் வாரியத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு
1 min read
Free electricity connection – Tamil Nadu government action order to electricity board
17.8.2024
தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் 60 லட்சம் நுகர்வோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் மும்முனை மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சார துறைக்கு, வேளாண் துறை வழங்கி வருகிறது. எனினும், விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தர மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.