தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
1 min read
144 Prohibitory Order in Tenkasi District
18/8/2024
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பகுதியில் விடுதலைப் போராட்ட வீரர் போதித்தவர் பிறந்தநாள் விழா மற்றும் ஒண்டிவீரன் வீரவணக்கம் நிகழ்ச்சியை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமுலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி 01.09.2024 அன்று நடைபெற இருப்பதால் தென்காசி மாவட்டம் முழுமைக்கும் 18.08.2024 பிற்பகல் 6.00 மணி முதல் 21.08.2024 முற்பகல் 10.00 மணிவரை மற்றும் 30.08.2024 பிற்பகல் 6.00 மணி முதல் 02.09.2024 முற்பகல் 10.00 மணிவரை தடையுத்தரவு அமுலில் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.கே. கமல் கிஷோர் அவர்களின் அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம். சிவகிரி வட்டம். பச்சேரி கிராமத்தில் 20.08.2024 அன்று நடைபெறும் ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் 01.09.2024 அன்று நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகைத்தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள், தென்காசி மாவட்டம் முழுமைக்கும் 18.08.2024 பிற்பகல் 6.00 மணி முதல் 21.08.2024 முற்பகல் 10.00 வரை 30.08.2024 பிற்பகல் 6.00 முதல் 02.09.2024 முற்பகல் 10.00 மணிவரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா.2023 சட்டம் பிரிவு 163 (1) மற்றும் (2) தடையுத்தரவு அமுலில் இருக்கும். இந்நேர்வில், அனைவரும் கூட்டமாக செல்லாமல் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
One attachment
• Scanned by Gmail