தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் திருடிய ரூ 60 லட்சம் – 81 செல்போன்கள் மீட்பு
1 min read
Rs 60 lakh stolen online in Tenkasi district – 81 cell phones recovered
18.8.2024
தென்காசி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் ஆன்லைன் மூலம் பணம் திருடிய 368 எதிரிகளின் வங்கி கணக்கை முடக்கியதோடு 60 லட்சம் பணத்தை மீட்டு பணத்தை பறிகொடுத்த 24 நபர்களிடம் ஒப்படைத்ததோடு காணாமல் போன 81 உயர்தர செல்போன் களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் அறிவுரைகளின்படி, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொ) வேணுகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர் வசந்தி, உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பபிரிவு) செண்பகபிரியா மற்றும் சைபர் கிரைம் காவலர்களின் தீவிர முயற்சியால் தென்காசி சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த நபர்களின் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 368 எதிரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட தொகை ரூ.15,96,77,964/- ஆகும்.
அதில் 2024 பிப்ரவரி மாதத்திலிருந்து பாதிக்கப்பட்ட 24 நபர்களுக்கு பணம் மொத்தம் ரூ.60,17,012/- மீட்கப்பட்டும் காணாமல் போன உயர் ரக செல்போன்கள் ரூ.15,80,000/- (பதினைந்து இலட்சத்து என்பதாயிரம்) ரூபாய் மதிப்பு உள்ள செல்போன்கள் 81 கண்டுபிடிக்கப்பட்டும் இன்று 17.08.2024ம் தேதி உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் துறை மூலமாக இதுவரை 646 செல்போன்கள் கண்டுபிடிக்கப் பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ10,51,33,300/- (பத்து கோடியே ஐம்பத்தி ஒன்று இலட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து முந்நூறு) ஆகும்.
மேலும் சைபர் கிரைம் மூலம் பணம் இழந்த நபர்களுக்கு பணத்தை மீட்டு எடுக்கவும் அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் குற்றவாளிகளை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக செயல்பட்ட தென்காசி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் அனைவருக்கும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.