பாவூர்சத்திரத்தில் தெட்சண மாற நாடார் சங்க மகாசபை கூட்டம்
1 min read
Deksana Mara Nadar Sangh Mahasabha meeting at Bhavoorchatra
19.8.2024
திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்கத்தின் 59வது மகா சபை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன்நாடார் தலைமை வகித்தார். துணைச். செயலாளர் ராமநாதன் நாடார் அனைவரையும் வரவேற்று பேசினார்.சங்கத்தின் செயலாளர் ராஜகுமார் நாடார் சங்கத்தின் வளர்ச்சி பணிகள், சங்க கல்வி ஸ்தாபனங்களின் வளர்ச்சி பணிகள், சங்கம் நிகழ்த்திய சாதனை விவரங்கள் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
2020-21ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை சங்க பொருளாளர் செல்வராஜ் வாசித்து, விளக்கம் அளித்தார். காரியகமிட்டி உறுப்பினர் காமராஜ் நாடார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.சங்க ஆயுட்கால உறுப்பினர்கள் சமுதாய வளர்ச்சி குறித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் மும்பை கிளை சேர்மன் காசிலிங்கம் நாடார், பொருளாளர் பொன்ராஜ்நாடார், துணை சேர்மன் மகேந்திரன் நாடார், இணை செயலாளர் சுரேஷ்நாடார், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ஜேக்கப்நாடார், மணிகண்டன் நாடார், பொன்பாண்டி நாடார், ரெம்ஜிஸ்நாடார், ராஜ்குமார் நாடார், மதிச்செல்வன் நாடார், சென்னை கிளை சங்கபொருளாளர் ஜெகதீசன்நாடார், திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க காரியகமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சப்-கமிட்டி உறுப்பினர்கள், சங்க ஆயுட்கால உறுப்பினர்கள், சமுதாய பெரியவர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், நெல்லை மாவட்டம் சூரபுதுக்குளத்தைச் சேர்ந்த தர்மராஜ் நாடார் மகன் பொன்பெருமாள் (19) என்பவர் பனை மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு சங்க நலிவுற்றோர் நல நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான காசோலையை சங்க நிர்வாகிகள் முன்னிலையில், அவரது தாயார் மயில் அம்மாளிடம் வழங்கப்பட்டது. இதே போல், ஓட்டப்பந்தய வீரரான பாளையங்கோட்டையை சேர்ந்த ஜேசுதுரைநாடார் மகன் சகாய அன்றோ என்பவர் மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அவருக்கு போட்டிகளில் பங்கேற்க போக்குவரத்து செலவுக்காக சங்க நலிவுற்றோர் நல நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
முடிவில் சங்கத்தின் மூத்த நிர்வாக உறுப்பினர் செல்வன்நாடார் அனைவருக்கும் நன்றி கூறினார்.